Random image

21ந்தேதி வெளியாகிறது விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யக்குநர் ஹரி கூட்டணியில் விக்ரம் நடித்துள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’:  வரும் 21ந்தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்பட முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சூரி, பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர் , ஸ்ரீதேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள், டீசர், மற்றும் இரண்டு டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இதன் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

.‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.  ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இதற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர், 2 டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தை வருகிற செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்து உள்ளது.