டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 69,028 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்தஎண்ணிக்கை 29,73,368 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள்  உயர்ந்து. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பாதிப்புஅதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 69,028 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை  29,73,368ஆக  உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,96,099 ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 62,858 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்யுள்ளோர்  எண்ணிக்கை 22,20,799 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் சதவிகிதம் இந்தியாவில் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 952 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை  உயிரிழந்தோர்  நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 55,928 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிப்பில்  மகாராஷ்டிரா மாநிலம்  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  2வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.