ஜெனிவா: உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ்,  இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இன்று (ஆகஸ்டு 22)  காலை 6மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,31,05,078 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  8லட்சத்து 2ஆயிரத்து 889ஆகவும் உள்ளது.

  

உலகம் முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 22/08/2020  காலை 6 மணி நிலவரப்படி,  2,31,05,078 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,57,00,852 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  8,02,889 ஆக அதிகரித்து உள்ளது.

உலகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.   அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,796,727 ஆகவும்,  இதுவரை  1,79,200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 3,127,418 பேர் குணமடைந்து உள்ளனர்.

2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,536,488  ஆகவும்,  இதுவரை  112,423 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை2,670,755 பேர் குணமடைந்து உள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால், ஒருநாள் பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,973,368 ஆக  உள்ளது.  இதுவரை55,928 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,220,799 பேர் குணமடைந்து உள்ளனர்.