மும்பை:

இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 22 ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளதால், மக்கள் நீண்ட க்யூவில் நிற்க வேண்டியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஏடிஎம் இயந்திரம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் சராசரியாக 130 பரிவர்த்தனைகளாக அதிகரித்தது.

மேலும், வங்கிகள் டெபிட் கார்டுகளை வழங்குவதால், ஏடிஎம் இயந்திரங்களை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, 78 கோடி டெபிட் கார்டுகள் இருந்தன. அதன்பிறகு, 2019 ஏப்ரலில் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 88 கோடியாக உயர்ந்தது.

மேலும் பிரதம மந்திரியின் ஜன் தன் யோச்னா திட்டத்தின் கீழ் , 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

இதில் பெரும்பாலோர் கணக்குகளில் கிஷான் திட்டத்தின் கீழ், 3 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது.

88 கோடி டெபிட் கார்டுகளிலிருந்து மாதந்தோறும் 80 கோடியே 90 லட்சம் அளவுக்கு மட்டுமே ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

ஒரு கார்டுக்கு 0.9% பரிவர்த்தனை மட்டுமே நடக்கிறது. ஒரு கணக்கிலிருந்து சராசரியாக மாதந்தோறும் ரூ.3,214 பணம் எடுக்கப்படுகிறது.
இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 22 ஏடிஎம் என்ற நிலை உள்ளது. இது உலக அளவிலான சராசரியைவிட பாதியாகும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் சீனாவில், இந்தியாவை விட ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை போதுமானது இல்லை என நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும் என நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஏடிஎம் இயந்திரங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஏராளமான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் ஏடிஎம் இயந்திரங்களை கையாளும் செலவு அதிகம் ஆகும் என வங்கிகள் கருதுகின்றன.

ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பதிலாக பண பரிவர்த்தனை சுழற்சி இயந்திரங்களையே பயன்படுத்த வங்கிகள் விரும்புகின்றன.

ஒரே இயந்திரத்தில் பணத்தை டெபாஸிட் செய்யும் வசதியும், எடுக்கும் வசதியும் இருப்பதால் ஏடிஎம் இயந்திரங்களை கூடுதலாக்க வங்கிகள் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் வங்கியாளர்கள்.