பொதுத் துறை வங்கிகளுக்கு 22 செயல் இயக்குனர்கள் நியமிக்க முடிவு…பட்டியல் தயார்

டில்லி:

பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் 22 பொது மேலாளர்கள் செயல் இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்படவுள்ளது. வங்கிகள் வாரிய பியூரோ இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கான 22 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் அகர்வால், அஜ்யேய் குமார் ஆசாத், மனாஸ் ரஞ்சன் பிஸ்வால், அஜித்குமார் தாஸ், விஜய் துபே, தினேஷ் குமார் பூணம் சந்த் கார்க், கோபால் குசைன், சாந்தி லால் ஜெயின், விவேக் ஜா, விக்ரமாதித்யா சிங் கிச்சி, அஜய் குரானா.

அதுல் குமார், சஞ்சய் குமார், மணிமேகலை, ராஜகோபால், ராமச்சந்திரன், சீனிவாச ராவ், உஷா ரவி, அலோக் ஸ்ரீவத்சவா, ஹேமந்குமார் தம்தா, ஷினாய் விஸ்வநாத் விட்டல், அஜய் வயாஸ் ஆகியோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.