சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.

நேற்று இரவு (15ந்தேதி) 9 மணி முதல் காலை 9 மணி வரையிலான 12 மணி நேரத்தில் 22 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இதையடுத்து, சென்னையில் கொரோனா பாலி எண்ணிக்கை  404ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில்  இதுவரை  33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுமேலும் 22 பேர் பலியாகி 404 ஆக அதிகரித்து உள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் , ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனைகளில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதிகரித்து வரும் உயிரிப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.