Random image

அசாம் வெள்ளம் : பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து 22 பேர் மாயம்

கௌகாத்தி

பிரம்மபுத்திரா நதி வெள்ளத்தில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காணாமல் போய் உள்ளனர்.

வட மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது.  இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் துயருற்று வருகின்றனர்.   இந்த வெள்ளத்தினால் இது வரை 7 மாநிலங்களில் ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.   அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்  மாநிலத்தில் பல இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது.

கௌகாத்தி நகரின் அருகில் உள்ள ஒரு சிற்றூரில் வெள்ளம் புகுந்து பலர் பாதிப்பு அடைந்தனர்.  அவர்களை மீட்டு கௌகாத்தி நகருக்கு அழைத்து வர மீட்புப் படையினர் நேற்று ஒரு இயந்திரப் படகை எடுத்துச் சென்றனர்.   அந்தப் படகில் கிராமத்தை சேர்ந்த 36 பேரை  ஏற்றிக் கொண்டு வந்தனர்.

அந்த படகு வெள்ள நீரில் கவிழ்ந்தது.   படகில் வந்த அனைவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.   அதில் 11 பேர் உயிருடன் மீட்கப்படுள்ளனர்.   மூன்று பேரின் சடலங்கள் கிடைத்துல்ள்ன.   மீதமுள்ள 22 பேர் காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை.   அவரகளை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.