சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை:

சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை  மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி  உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநில தலைவர் சென்னையில் கொரோனா பரவல் உச்சமடைந்து உள்ளது.  நேற்று (ஜூன் 30ந்தேதி) ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்தால், பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை  34,828 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், 22,610 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இதுவரை சென்னையில் மட்டும் 888 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேர்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட  3 பேர் உயிரிழந்துள்ளனர்.