சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை:

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  நேற்று  8வது நாளாக கொரோனா பாதிப்பு  1216 ஆக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை   73,728ஆக உள்ளது.

சென்னையில் இதுவரை 52,287 பேர் கொரோனா குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.  20,271  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று  மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1169-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 16 மணி நேரத்தில்   மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி