ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: பொதுமக்களிடையே பரபரப்பு

ஜெய்ப்பூர்: 

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காரணமாக  ராஜஸ்தானில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஜிகா வைரஸால் பாதிப்பு குறித்து உடடினயாக அறிக்கை அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை, ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 86 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.  டெங்கு காய்ச்சலைப்போன்றே  தொடர்ந்து காய்ச்சல், தோல் பாதிப்பு, தசை மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி ஏற்படுவது ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன.

ஏற்கனவே  கடந்த 2017-ம்  ஜிகா வைரஸ் பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஜிகா வைரஸ் பரவியிருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்களுக்கு நடைபெற்ற ரத்த பரிசோதனையின்போது  ஜிகா வைரஸ் பாதிப்பு தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் காரணமாக மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையை தொடர்ந்து  22 பேர் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் பீகார் சென்று திரும்பிய நிலையில், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளதாக  கூறப்படு கிறது. இதன் காரணமாக பீகாரிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அங்கும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ராஜஸ்தானில் திடீரென்று பலர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அதுகுறித்து  அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை, மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.