சென்னை: வன்முறையில் ஈடுபட்டதாக 22 பேர் கைது

கடந்த 23 ஆம் தேதி சென்னையில் வன்முறையில் ஈடுபட்டு அரசு வாகனங்கள் மற்றும் பொது சொத்திற்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 22 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த 23ம் தேதி, சென்னையில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. சென்னை வடபழனி, எழும்பூர், எம்.கே.பி.நகர் மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டன.


வடபழனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் வாகனத்தை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்தியதாக வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிவா (எ) சிவகுமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர மேலும் சிலரை தேடிக்கொண்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.