தஞ்சாவூர்:

ஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம்,  தஞ்சாவூர் கரந்தை பகுதியில் உள்ள  ஜெயின் தெருவில் ஸ்ரீஆதீஸ்வர சுவாமி என்கிற ஜைன கோயிலில் உள்ள சிலைகள் திருடு போனது.

இந்த கோவிலில் இருந்த  ஒன்றரை அடி உயர ஆதீஸ்வரர் சிலை உள்பட 22 உலோகச் சிலைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர்  மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர்.  இது தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதன் அடிப்படையில்  தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள சுங்கான்திடல் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சரவணன் என்கிற ராஜேஷ் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் மூலம் கரந்தையைச் சேர்ந்த பி. சண்முகராஜன் (45), சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்த பி. ரவி (45), நாகை மாவட்டம், கீழ்வேளூர் பிராதபுரத்தைச் சேர்ந்த வி. விஜயகோபால் (37) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், ராஜேஷ் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன.