Random image

ஆப்கானிஸ்தான்: தாலிபான் தீவிரவாதிகள் 22 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் போலீசார் மற்றும் தாலிபான்களிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 தாலிபான் தீவிரவாதிகள் மற்றும் 5 போலீசார் கொல்லப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Afgan

ஆப்கானிஸ்தானில் அரசுப் பாதுகபடைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், திங்கட்கிழமை வடமேற்கு பகுதியில் உள்ள பத்கிஸ் காவல்நிலையத்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றடுஹ். இதில் 22 தாலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 போலீசார் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் மூத்த கமாண்டோ அதிகாரி அப்துல் ஹகிங் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 16பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்நாட்டு செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தலிபான் தீவிரவாதிகளுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Post Co