22 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது!

--

டில்லி,

குடியரசு தின விழவில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 22 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வருடம்தோறும் குடியரசு தின விழாவை ஒட்டி, வீர தீர செயல் மற்றும் சிறந்த பணிக்காக குடியரசு தலைவர் விருது வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த, 22 போலீசாருக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை சிறப்பு பரிவு, எஸ்ஐ வீராசாமி, திருச்சி பொன்மலை உதவி ஆணையர் மாணிக்கவேல், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணன், தூத்துக்குடி ஊழல் தடுப்பு ஆய்வாளர் ரகுபதி மற்றும்

எழும்பூர் சி.பி.சி.ஐ.டி., அதிகாரி அருள்தாஸ் ஆகியோர் உட்பட 22 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.