மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் அப்பகுதியில் கொரோனா வேகமாக பரவியது.

பின்னர் சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டது. நேற்று  11 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட, பாதிக்கப்பட்டவர்களின் ண்ணிக்கை 2 ஆயிரத்து 210 ஆக உயர்ந்து இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதியதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 218 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 81 பேர் பலியாகி உள்ளனர்.

மே மாதம் தாராவியில் கொரோனா பாதிப்பு 4.3% என இருந்தது. இந்த மாதம் அது குறைந்து 1.02% என உள்ளதாக பிரஹன்மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது.