24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…

டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில்  புதிதாக மேலும் 22,752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்- 4,56,831  ஆகவும், தற்போதைய நிலையில்,  கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோர்- 2,64,944 பேர் என்றும், இதுவரை 4,56,831 பேர் குணமடைந்துள்ளனர். 20,642 பேர் உயிரிழந்துள்ளனர்.  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 22,752 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 482 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே வேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதம் 61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 1,04,73,771 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (ஜூலை 7ந்தேதி) மட்டும் 2,62,679 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.