சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை  14,753  ஆக உயர்ந்தது.  நேற்று மட்டும் 4 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது.
சென்னையில் மட்டும் நேற்று 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் பாதிக்கப்பட்ட வர்களின்  எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் தற்போது நிலையில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5461 என்றும்,  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3791 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 1768 ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 பேரும், திரு.வி.க. நகரில் 1079 பேரும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 1000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் இதுவரை 3,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் தற்போது சிகிச்சையில் 5,461 பேர் இருக்கின்றார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.