23/06/2020: ராயபுரத்தில் 6484 ஆக உயர்வு – சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,484 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 37பேர் உயிரிழந்தனர். 7பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது. அதில், 18,372 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,23,756 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இதுவரை 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்