சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பணியாற்றிய 23 ஊழியர்களுக்கு கொரோனா…

சென்னை  :

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில  பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 72,500  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை  49587 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 21,766  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இதுவரை கொரோனாவல்  1146-ஆக உயர்ந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகஅரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர்கள் அனைவரும்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நட்சத்திர ஹோட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி