இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி பகீர் தகவல்!

டில்லி,

ந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில்  23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை  யுஜிசி வெளியிட்டு உள்ளது.

 

யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு  மற்றும் ஏ.ஐ.சி.டி.இ நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வு அதுபற்றிய தகவல்களை  தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்களும்,  279 போலி தொழில்நுட்ப நிறுவனங்க ளும் இருப்பதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லியில்தான் அதிகமான போலி கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அங்குள்ள கல்லூரிகளில் 66 கல்லூரிகள் போலியானவை என்றும், 7 பல்கலைக்கழகங்க ளும் போலியானவை என்ற  அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளது.

இந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  கேள்விக்குறியாகும் என்றும், அவர்கள் வழங்கும் டிகிரி சான்றிதழ்கள் போலியானவை என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றும், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா,  மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்க ளிலும்  அதிக அளவு போலி கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய கீழ்காணும் இணையதளங்களை பார்க்கலாம்…

www.ugc.ac.in,

Leave a Reply

Your email address will not be published.