23பேரை பலி கொண்ட பஞ்சாப் பட்டாசு ஆலை விபத்து! அனுமதி பெறாமல் இயங்கியது அம்பலம்

குர்தாஸ்புர்:

ஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியதுடன் 23 உயிர்களையும் காவு வாங்கி உள்ளது. விசாரணையில், அந்த பட்டாசு ஆலை அரசிடம் அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும்  குர்தாஸ்பூர் பகுதியில் அரசு அங்கீகாரமற்ற முறையில் 3 மாடி கட்டிடத் தில்  இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மருந்து வெடிப்பினால் சுமார் 23 பேர் உயிரிழந்த நிலையில்,  30 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர வெடிவிபத்தில் ஆலை செயல்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் அடியோடு இடிந்து விழுந்த நிலையில், அருகே உள்ள பலரது வீடுகளும் இடிந்தன. இதன் காரணமாக இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மாநில காவல்துறை ஆய்வாளர்,  வெடிவிபத்து நடைபெற்ற ஆலை, அரசிடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மருந்து வெடிப்பினால் பட்டாசு ஆலை முழுவதும்  சேதமடைந்துள்ளது. அருகிலுள்ள கட்டிடங் களும்  நாசமாகி இருக்கின்றன. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் இடுக்குகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

இந்த வெடி விபத்து குறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வர்  அமரீந்தர் சிங் சம்பவம்,  இந்த வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும்,  அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் கூறி உள்ளர்.