சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது.   கடந்த 16 மணி நேரத்தில்  மேலும் 23 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில்  கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இதை கட்டுப்படுத்த ஏராளமான குழுக்கள், மருத்துவ நிபுணர்கள், சுகாதார பணியாளர்கள் போடப்பட்டுள்ளதாக மாநகராட்சியும் தமிழகஅரசும் கூறி வருகின்றன. ஆனால், தொற்று பரவல் தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு  47,650  ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை  694 பேர் உயிரிழந்துள்ளனர். 18,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகராட்சியின் 12 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ எட்டியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.