சென்னை சிறுமி பலாத்காரம்: மேலும் 23 பேருக்கு தொடர்பு

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 23 பேருக்கு இச்சம்பத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

.சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 11 வயது சிறுமி 15 பேரால் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்க ஊசி போதை ஊசி போட்டும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் வெளியானது.

இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல காவலர்கள் ஆயத்தமாயினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் 17 பேரையும் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட குற்றச் சம்பவத்தில் மேலும் 23 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.