2019 ஆம் ஆண்டில் 230 புதிய எமோஜிகள் வெளியாகிறது

டில்லி

ந்த ஆண்டு உணர்ச்சி சித்திரம் எனப்படும் எமோஜிகளில் 230 புதிய எமோஜிகள் வெளியாகிறது

நாட்டில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரகள் அனைவருக்கும் எமோஜியையும் உபயோகபடுத்தி வருகின்றனர். எமோஜி என்பது  உணர்ச்சியை குறிப்பிடும் படமாகும். இதில் ஸ்மலி, ஆங்கிரி என பல உணர்வுகளை காட்டும் படங்கள் ஏற்கனவே உள்ளன. பாகுபலி மற்றும் ரஜிகாந்த் நடித்த காலா திரைப்பட கதாபாத்திரங்கள் கொண்ட எமோஜிகள் மிகவும் பிரபலமானவைகள் ஆகும்.

இந்த எமோஜிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிப்பது மற்றும் அவற்றை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை யுனிகோட் கன்சோர்டியம் என்னும் புகழ்பெற்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த ஆண்டு இந்த நிறுவனம் எமோஜி 12.0 என்னும் பெயரில் எமோஜிகளை வெளியிட உள்ளது. இதில் அடிப்படையாக 59 எமோஜிகள் உள்ள நிலையில் அதன் நிறம், பாலின மாற்றம் மூலம் மொத்தம் 230 எமோஜிகள் வெளியாக உள்ளன.

இந்த எமோஜிகளின் மாதிரிப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் கண்டபடி இந்து கோவில், ஆட்டோ ரிக்‌ஷா, விளக்கு, சேலை, பாராசூட், வெங்காயம், நாய் உள்ளிட்டவைகள் இந்த வருடம் வெளியாகலாம் என தெரிய வந்துள்ளது. இந்த எமோஜிகள் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியாகலாம் எனவும் அப்போது எமோஜிகளில் மேலும் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது

 

You may have missed