Random image

பல்லாவரம் அருகே 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவப்பெட்டி கண்டெடுப்பு

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்லாவரம் அருகே 2,300 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டியை கண்டுப்பிடித்து உள்ளனர். தொல்லியல் நிபுணர்கள் அலெக்சாண்டர் காலத்தில் இருந்து 140 ஆண்டுகள் கடந்த பழமையான டெர்ரகோட்டா சவப்பெட்டியை மலைப்பகுதியில் இருந்து தோண்டி எடுத்தனர்.
sarcophague
பல்லாவரத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்திய தொல்லியல் துறை கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் களிமண்ணால் ஆன சவப்பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது.

இது குறித்து சென்னையை சேர்ந்த தலைமை தொல்பொருள் ஆராய்ச்சியாளரான சுப்ரமணியம் கூறுகையில் “ பல்லாவரம் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சவப்பெட்டி 2300 வருடங்கள் பழமையானது. இதன் மூலம் நாடோடிகளாக இருந்த மக்களின் வாழ்க்கை முறையை அறியமுடிகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த 12 கால்களை கொண்ட சவப்பெட்டி கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார். தொல்லியல் ஆய்வுகள் மூலம் இதன் உண்மையான வயது கண்டறியப்படும் என்றும் அவர் கூறினார்.
sargopahage3
ஜமீன் பல்லாவரத்தில் உள்ள பரிவேட்டுமலை அடிவாரத்தில் இரண்டு அடிகள் ஆழத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சி பழங்காலத்திய சவப்பெட்டி கிடைக்க வழிவகை செய்தது. இரும்பு கலவையினால் சவப்பெட்டி மூடப்பட்டிருந்தாலும் மண் அரிப்பு காரணமாக மலைக்கு கீழே இறங்கியுள்ளதாக தொல்லியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 12 கால்கள் கொண்ட சவப்பெட்டி 5.6 அடி நீளமும், 1.5 அடி அகலமும், 1.64 அடி ஆழமும் கொண்டுள்ளது.