a
 
ரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனது இரட்டை இலை சின்னத்திலேயே நிற்கிறது அ.தி.மு.க.
கூட்டணிக் கட்சிகளும் தனது சின்னத்தில் நிற்கவேண்டும் என்று நிபந்தனைவிதித்து சாதித்தும்விட்டது. இது ஒரு தேர்தல் அதிசயம்தான்.
ஜெயலலிதாவுக்கு ஏன் இப்படி ஓர் ஆசை? அ.தி.மு.க.வை துவக்கி உச்சாணிக்கொம்பில் வைத்த எம்.ஜி.ஆர்.கூட இப்படி ஓர் முடிவை எடுத்ததில்லையே.. என்ற சந்தேகம் – ஆச்சரியம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ராமண்ணா
ராமண்ணா

மூத்த பத்திரிகையாளர் திருஞானம் இதற்கு ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்:
“அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்த பிறகுதான் பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றி அங்கீகாரம் பெறறன.  ஆனால் இரு  கட்சிகளுமே பின்னாட்களில் அ.தி.மு.கவை விமர்சித்தன. எதிர்த்து நின்றன. நிற்கின்றன.    அதே போல கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு அங்கீகராம் கிடைத்ததும் அ.தி.மு.கவால்தான்.  அந்த கட்சியும் அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்கிறது.
அதனால்தான், பிறரை வளர்த்துவிட நாம் ஏன் ஏணியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே கூட்டணி கட்சிகள் போட்டியிடட்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.
தமாகா இன்னும் போயஸ் வாசலில்தான் நிற்கிறது. அவர்களையும் அழைத்து சீட் கொடுப்பார். அவர்களும் இரட்டை இலையில்தான் நிற்கப்போகிறார்கள்” எனறு சொல்லி சிரித்தார்.
எனக்கென்னவே அவர் சொன்னது லாஜிக் ஆகத்தான் இருக்கிறது. பார்ப்போம்..!