24/04/2021 7AM: India corona Status…

டெல்லி: இந்தியா முழுவதும் புதிதாக 3.44 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் 2600 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 1 கோடியே 66லட்சத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதே வேளையில்,ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  நேற்று  ஒரே நாளில் புதிய வழக்குகள் மீண்டும் 3.46 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளன, அதே நேரத்தில் இறப்புகள் வெள்ளிக்கிழமை 2,600 என்ற புதிய சாதனையை எட்டின.

கடந்த மூன்று நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய வழக்குகளை (9.94 லட்சம்) பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் உள்ளது, இதில் 24 மணி நேரத்தில் இந்தியா 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

நேற்று ஒரே  நாளில் 3,44,949 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1,66,02,456 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 25,43,914 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,.38,62,119 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இதுவரை 1,89,549 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில், இதுவரை 13,54,78,420 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.  இந்தியாவில் நடத்தப்படும் கொரோனா சோதனைகளில் 60 சதவிகிதம்  மகாராஷ்டிராவில் உள்ள ஆய்வங்களில் நடத்தப்படுவதாகவும்,  அங்கு B.1.617 எனப்படும் SARS-CoV-2 இன் புதிதாக அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த தொற்றானது,  59% மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், தற்போது செலுத்தப்பட்டு வரும்,  கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதன் பாதிப்பை தடுக்கும் என்பதையும்   விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதுபோல, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறையை போக்கு நாள் ஒன்றுக்கு  3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை  தயாரிக்க  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உற்பத்தியை அதிகரிக்க ஏப்ரல் 12 முதல் ரெம்டெசிவிருக்கு 25 புதிய உற்பத்தி தளங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருந்து ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது.