24/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை   சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு இன்று  புதிதாக 6,785 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,92,964 ல் இருந்து 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில்  88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இன்று இதுவரை இல்லாத உச்சத்தில்  6,504 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ல் இருந்து 1,43,297 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 71.74 % பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 6500 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 53,132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடி யாக செங்கல்பட்டு 11,308, திருவள்ளூர் 11,008, மதுரை 9,302, காஞ்சிபுரம் 6,361, விருதுநகர் 5,193, தூத்துக்குடி 4,971, திருவண்ணாமலை 4,781, வேலூர் 4,646, திருநெல்வேலி 3,387, தேனி 3,321, திருச்சி 3,089, ராணிப்பேட்டை 3,223, கன்னியாகுமரி 3,124 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

12 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 7 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 7 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்:

1.அரியலூர் 37

2.செங்கல்பட்டு 419

3.சென்னை 1299

4.கோயம்புத்தூர் 189

5.கடலூர் 91

6.தர்மபுரி 36

7.திண்டுக்கல் 80

8.ஈரோடு 25

9.கள்ளக்குறிச்சி 179

10.காஞ்சிபுரம் 349

11.கன்னியாகுமரி 266

12.கரூர் 5

13.கிருஷ்ணகிரி 82

14.மதுரை 326

15.நாகப்பட்டினம் 46

16.நாமக்கல் 28

17.நீலகிரி 34

18.பெரம்பலூர் 16

19.புதுக்கோட்டை 95

20.ராமநாதபுரம் 72

21.ராணிப்பேட்டை 222

22.சேலம் 122

23.சிவகங்கை 82

24.தென்காசி 93

25.தஞ்சாவூர் 186

26.தேனி 234

27.திருப்பத்தூர் 56

28.திருவள்ளூர் 378

29.திருவண்ணாமலை 134

30.திருவாரூர் 96

31.தூத்துக்குடி 313

32.திருநெல்வேலி 171

33.திருப்பூர் 18

34.திருச்சி 217

35.வேலூர் 174

36.விழுப்புரம் 164

37.விருதுநகர் 424

வெளிநாடு – 18 உள்நாடு – 9