சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் உள்ளது சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில்,  1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  90,900 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75,384 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,569  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில்  அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2108பேரும் அண்ணா நகரில் 1689 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 885 பேரும் தேனாம்பேட்டையில் 1155 பேரும் தண்டையார்பேட்டையில் 700 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 90,900 பேரில் 13,569 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 1,947 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 58.26 சதவீதம் மற்றும் பெண்கள் 41.74 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 75,384 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் – 2,108 பேர்
அண்ணா நகர் – 1,689 பேர்
தேனாம்பேட்டை -1,155 பேர்
தண்டையார்பேட்டை – 700 பேர்
ராயபுரம் – 885 பேர்
அடையாறு- 1,146 பேர்
திரு.வி.க. நகர்- 1,213 பேர்
வளசரவாக்கம்- 748 பேர்
அம்பத்தூர்- 938 பேர்
திருவொற்றியூர்- 433 பேர்
ஆலந்தூர்- 542 பேர்
பெருங்குடி- 407 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.