சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85-ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 84.46 % குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று ஒரே நாளில், தமிழகத்தில் மேலும் 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 1,278 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கடந்த மாதம் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 97 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வில் இருந்து இன்று 6,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,25,456-ஆக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,124 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 899 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 787 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4,464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 6,75,763-ஆக அதிகரித்துள்ளது.