ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது.  உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும்  பதினோறு லட்சத்தை தாண்டி விட்டது.

இன்று (24ந்தேதிந்தேதி) காலை 7மணி நிலவரப்படி,  உலக  நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 4,24,63,052 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  11,48,698 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 3,14,17,538 ஆக அதிரித்துள்ளது.

லகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் தொடர்கிறது. அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,746,953  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத் எண்ணிக்கை 1,149,224 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 31,423,798 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,819,508 ஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது.   இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,813,668 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 117,992 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 7,013,569  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 682,107 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,355,650ஆகவும்,  இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 156,528 ஆகவும் உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4,797,872  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 401,250  ஆக உள்ளது.