டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவில். கடந்த ஆகஸ்டு செப்டம்பரில் தொற்று பரவல் தீவிரமாகி இருந்தது.  தொற்று பாதிப்பு தினசரி 90ஆயிரத்தை தாண்டியது. தறபோது தொற்று பாதிப்பு 60ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 53, 935 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,  இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,13,668 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையில் 6,80,804  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 70,13,569 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 1,17,992 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 16,32,544 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 43,015 பேர் உயிரிழந்துள்ளனர்.
2வது இடத்தில் ஆந்திரா மாநிலம் உள்ளது. அங்கு இதுவரை 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 6544 பேர் உயிரிழந்துள்ளனர்.
3வது இடத்தில் கர்நாடக மாநிலம் தொடர்ந்து வருகிறது.  அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் 8லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பு  10,821 ஆக உயர்ந்துள்ளது.
4வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 6,59,432 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 32,960 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 10,858 பேர் உயிரிழந்துள்ளனர்.