சென்னை:  தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.இன்று தமிழகம் முழுவதும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,024 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 31,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,93,299 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.81 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேர், காஞ்சிபுரத்தில் 140 பேர், திருவள்ளூரில் 165 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக கோவையில் 287 பேர், திருப்பூரில் 101 பேர், சேலத்தில் 148 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும், சேலத்தில் 148 பேருக்கும்,, திருப்பூரில் 101 பேருக்கும், ஈரோடில் 98 பேருக்கும், நாமக்கலில் 83 பேருக்கும், மதுரையில் 77 பேருக்கும், வேலூரில் 63 பேருக்கும், தஞ்சாவூரில் 61 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று உயிரிழந்தோர் விவரம்:
அதிகபட்சமாக செங்கல்பட்டில் 5 பேரும், கோவை, காஞ்சிபுரத்தில் தலா 4 பேரும், சென்னை, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், நாகப்பட்டினம், சேலம், தூத்துக்குடி, வேலூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
வீடு திரும்பியோர் விவரம்:
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,78,623 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 290 பேரும், செங்கல்பட்டில் 257 பேரும், சேலத்தில் 191 பேரும், திருவள்ளூரில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 135 பேரும், நாமக்கல், திருப்பூரில் தலா 123 பேரும், ஈரோடில் 112 பேரும், தஞ்சாவூரில் 93 பேரும், மதுரையில் 92 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.