சென்னையில் இன்று மேலும் 24 பேர் கொரோனாவுக்கு பலி.. 1120 ஆக உயர்வு..

சென்னை:

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1120 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.  இதுவரை, மொத்தமாக 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு  1,829-ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,969ஆக உயர்ந்துள்ளது. நேற்று  ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1196-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  சென்னையில் இன்று  ஒரே நாளில்  மேலும்  24 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூர் மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 1 நபரும், கே எம் சி அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து,சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1220 ஆக அதிகரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி