அனில் அம்பானியிடம் கடன் பாக்கி வசூலிக்க 24 நிறுவனங்கள் வழக்கு

மும்பை

னில் அம்பானியிடம் இருந்து கடன் பாக்கியை வசூலிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் 24 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இரு நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் ஆகியவை கடனில் கடுமையாக சிக்கி உள்ளன. அந்த கடனை திருப்பி அளிக்க அனில் அம்பானி பலவித முயற்சிகளை எடுத்து வருகிறார். அயினும் கடனை அவர் இன்னும் முழுமையாக திருப்பிச் செலுத்தவில்லை.
இதை ஒட்டி ரிலையன்சின் இந்த இரு நிறுவனங்களிடம் இருந்து கடன் பாக்கியை வசூலிக்க 24 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அனில் அம்பானி அளிக்க வேண்டிய கடன் தொகை ஒரு சில லட்சங்களில் தொடங்கி கோடிவரை சென்றுள்ளது. பங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த நிறுவனம் அளிக்க வேண்டிய தொகை ரூ. 1 கோடி ஆகும். அதே நேரத்தில் ஆனந்த் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ. 30 கோடி பாக்கி உள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தினர் உட்பட யாரும் பதில் அளிக்க மறுத்துள்ளனர்.