மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்

டில்லி,

ரும் மார்ச் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின்சார சேவை வழங்கப்படும் என பாராளுமன்ற மக்களவையில், மத்திய அமைச்சர்  ஆர்.கே.சிங்  கூறினார்.

2019-ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

பாராளுமன்றத்தில் மின்சாரம் குறித்த உறுப்பினரின் கேள்விக்கு, இன்றைய கேள்வி நேரத்தின்போது பதில் அளித்த அமைச்சர்,  “இதுவரை மின்சார வசதி பெற்றிராத 1,694 கிராமங்களுக்கு 2018 டிசம்பர் இறுதிக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், “2019 மார்ச் மாதத்துக்கு பிறகு தொழில்நுட்பக் காரணங்கள் இல்லாத பட்சத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறும் மின்சார நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

நாடு முழுவதும் மின்சார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,75,000 கோடி செலவிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.