தமிழ்நாடு : பெண்களுக்கான உதவி தொலைபேசி எண் 181 தொடக்கம்

சென்னை

மிழ்நாடு அரசு பெண்களுக்கு உதவ 24 மணி நேர ஹாட்லைன் தொலைபேசி சேவையாக  181   எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது

நாடெங்கும் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.   குறிப்பாக வீடுகளில் உறவினர்களால் வன்முறையில் தொடங்கி வெளியிடங்கள் மற்றும் பணி புரியும் இடங்களில் பாலியல் அத்து மீறல் உள்ளிட்ட பல்வகை துயரை பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

தமிழக அரசு சமீபத்தில் பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.   அந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தொடங்கி வைத்துள்ளார்.   அவற்றில் ஒன்றாக பெண்களுக்கான இலவச ஹாட்லைன் தொலைபேசி சேவையான 181 எண் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த தொலைபேசி மூலம் பெண்கள் தங்களுக்கு வீடுகளில் அல்லது வெளியிடங்களில்  நடத்தப்படும் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள்,  தாக்குதல்கள் குறித்த தகவலை உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.  அத்ன மூலம் உடனடியாக அவர்களுக்கு காவல்துறை உதவி கிடைப்பது மட்டுமின்றி சட்ட மற்றும் மருத்துவ உதவிகளும்,  ஆம்புலன்ஸ் சேவைகளும் பெற முடியும்.

இந்த தொலைபேசி சேவை நாள்முழுவதும் இலவசமாக கிடைக்கும்.   இதில் பெண்களுக்கு நடக்கும் வன்முறை மற்ற துன்புறுத்தல்களுக்கான உதவிகள் மட்டுமின்றி நலத் திட்டங்கள் குறித்தும் அறிந்துக் கிஒள்ள முடியும்.   இந்த திட்டம் ரூ.62.70 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.