அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் 24மணி நேர சிகிச்சை… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய் தொற்று அல்லாத பிற நோய்களுக்கும் எவ்வித தங்குதடையுமின்றி அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.