கர்நாடகத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24% வாக்குகள் பதிவு

பெங்களூரு:

ர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுடன் 222 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முற்பகல் 11 மணி அளவில் 24 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 10.6 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது 11 மணி நிலவரப்படி 24 சதவிகித வாக்குகள் பதிவாக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.