Random image

தமிழகத்தில் பொங்கலுக்காக 24708 சிறப்பு பேருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 24708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வருடா வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சென்னை வந்து வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கும் சென்னையில் இருந்து வெளியூரில் பணி புரிபவர்கள் சென்னைக்கும் வருவது வழக்கமாகும். இதற்காக ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சிறப்பு பேருந்துக்களை இயக்கி வருகிறது.

இன்று சிறப்பு பேருந்துக்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் விஜயபாஸ்கர், “தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடபட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 14,282 பேருந்துகள் இயக்கபட உள்ளன.

வரும் ஜனவரி 11 முதல் 14ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகள் வெளியூரில் இருந்து சென்னை திரும்பவும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இந்த வருடம் சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார். .