சென்னை:
மிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக  அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனங்கள் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பதில் தமிழகஅரசு மும்முரம் காட்டி வருகின்றன.  இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு அமைத்து, வெளிநாட்டு  நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏற்கனவே  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிறுவனங்களில் 8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று காணொளி காட்சி மூலம்த அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய தொழில் நிறுவனங்கள்  மூலமாக 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,  தமிழகத்தில் 3,185 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள 11 நிறுவனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் மூலம் 6,955 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

1)    பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், CapitaLand  நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.
2)    கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில்,  350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.
3)    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
4)    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira  நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
5)    செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில்,  100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex ãWtd¤Â‹ Diesel Engine-களுக்கான Exhaust உற்பத்தி திட்டம்.
6)    காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe  நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
7)    கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,  MRC Mills  நிறுவனத்தின் Textiles processing திட்டம்.
8)    விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Sri Raajarajeshwari Life Care  நிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் ஊடீஏஐனு-19 நிவாரண மருந்துப் பொருட்கள்  உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.
என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு  புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள  வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB  உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள   11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்கள்.
இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது.