கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,67,296 ஆக உயர்வு

டெல்லி:

ந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்பு 7,67,296 -ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி  கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது டன், நேற்று மட்டும்  487 போ உயிரிழந்துள்ளனர்..

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,67,296 -ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 21,129 -ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள்  2,69,789 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுலரை  4,76,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ‘

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 19,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

கார்ட்டூன் கேலரி