டென்னிஸ் மைதானம் சேதம்: செரினா வில்லியம்ஸ்க்கு 10ஆயிரம் டாலர் அபராதம்!

லண்டன்:

டென்னிஸ் கோர்ட்டை சேதப்படுத்தியதற்காக பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்சுக்கு ரூ.10ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

24வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவரோவாவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

கால்இறுதிப் பேட்டியில் இன்று 55-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை எதிர் கொள்கிறார்.

இந்த நிலையில் டென்னிஸ் மைதானத்தை சேதப்படுத்தியதாக  செரீனா வில்லியம்ஸுக்கு  இங்கிலாந்து கிளப் 10,000 டாலர் அபராதம் விதித்துள்ளது. ஆனால்,  செரினா இதுவரை தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதுபோல,  ஃபேபியோ ஃபோக்னினி டென்னிஸ் சாண்ட்கிரெனிடம் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தபோது, ​​ஆட்டமிழக்காத நடத்தைக்காக $ 3,000 அபராதம் விதிக்கப்பட்டார்.

செரினா வில்லியம்ஸ் ஏற்கனவே நடைபெற்ற  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவருருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி