25/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி…

சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு  கடந்த 16 மணி நேரத்தில்   மேலும் 29  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சமடைந்து உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி,  தமிழகத்தில் ஒரே நாளில் 2424 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  45,814 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை  45,814 ஆக உயர்ந்தது.  நேற்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் காரணமாக சென்னையில் பலியானோர் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்,   கடந்த 16  மணி நேரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உயிரிழப்பு தொடர்ந்து  அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.