சென்னை:

மிழகத்தில் தலைநகர் சென்னையில் நேற்று  (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  45,814 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்படைந் தோர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், 12 மண்டலங் களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று கொரோனாவுக்கு  33 பேர் மட்டுமே பலியாகினர். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  866 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று 6வந்தவர்களில் இதுவரை 26,472 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகப்பட்சமாக ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில்உள்ளது. மேலும்,  12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 6837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5531 பேர், தேனாம்பேட்டை- 5316 பேர், கோடம்பாக்கம்- 4908 பேர், அண்ணாநகர்- 4922 பேர், திருவிக நகர்- 3896 பேர், வளசரவாக்கம்- 1957 பேர்,திருவொற்றியூர்-1755 பேர், அம்பத்தூர் -1741 பேர், அடையாறு – 2777 பேர், மாதவரம்- 1383 பேர்,பெருங்குடி-916 பேர், சோழிங்கநல்லூர்- 894 பேர், ஆலந்தூர்-1124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.