டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 59,696 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்தஎண்ணிக்கை 31,64,881 ஆக உயர்ந்து உள்ளது.

சீனாவில் இருந்து  பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  பல நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 59,696 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 31,64,881   ஆக  உயர்ந்து  உள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,02,669 ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 66,305 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்யுள்ளோர்  எண்ணிக்கை 24,03,101 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 854  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை  உயிரிழந்தோர்  நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 58,546 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிப்பில்  மகாராஷ்டிரா மாநிலம்  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  2வது இடத்தில் தமிழகமும், 3வது இடத்தில் ஆந்திர பிரதேசமும், 4வது இடத்தில் கர்நாடக மாநிலமும், 5வது இடத்தில் உ.பி.யும் தொடர்ந்து  வருகிறது.