சென்னை:

மிழக அரசு உத்தரவுபடி 25 சதவிகித ஏழை மாணவ மாணவிகள், தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளிலும்  சேர்ந்து கல்வி பயிலலாம்.

அதன்படி இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் சேர விரும்புபவர்கள் வரும் ஏப்ரல் 20ந்தேதி முதல் சேர விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் ஏப்ரல் 20ம் தேதி முதல் மாணவர்கள் சேரலாம் என்றும், தனியார் பள்ளிகள் மாணவர்களை சேர்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்,மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த பெற்றோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம்.

இதை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.