சென்னையில் அவசரப் பணிகளுக்காக 25 பேருந்துகள் இயக்கம்.. விவரம்

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டு வரும், அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக, சென்னை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்  25 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலை இருமுறையும், மாலை இருமுறையும் சென்னையின் முக்கியமான 11 இடங்களில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதுமே போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வீடுகளுக்கு சென்றுவர ஏதுவாக, 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் பேருந்துங்கள் இயக்கப்படும் இடம் நேரம்