சென்னை:

பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு  25 நாட்டு கோழிகள் வழங்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக கால்நடைத்துறை அமைச்சர்அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் ஏராளமான ஏழை எளியோர் பயனடைந்து உள்ளனர்  என்றும், கால்நடைகளுக்கு தரமான சிகிச்சை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாவும் கூறினார்.

2011 ல் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கிராமபுற வாழ்வாதராம் பெருக்க குடும்பம் ஒன்றுக்கு4 வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம்11 லட்சம் மகளிருக்கு வெள்ளாடுகள் வழங்கியுள்ளோம்.

விலையில்லா கறவை பசு ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படுள்ளது. இப்போதுகிராம பகுதி ஏழை மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 25 நாட்டுக்கோழிகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கும் 25 நாட்டு கோழிகள் வழங்கப்படும் என்று கூறியவர்,  கால்நடைகளுக்கு தமிழகம் முழுவதும் தரமான சிகிச்சை வழங்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவை 32 மாவட்டங்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது.  அம்மா ஆம்புலன்ஸ் சேவை விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு பெறும். தமிழக மருத்துவ சேவை கழகம் மூலம் ஊர்திக்கு 2 லட்சமும் கால்சென்டர் நடத்தவும் நிதி ஒதுக்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் விரைவில் இந்த முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

மேலும், கால்நடைகளுக்கு   உடல்நலக் குறைவு ஏற்பட்டால், பராமரிப்பாளர்கள் அதனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை நடைமுறைக்கு வரும் என்று கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கால்நடைகளுக்காக செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸில் முதலுதவி மருந்துகள், ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கும். கால்நடைகளுக்கு பெரிய பிரச்னை நிகழ்ந்தால் அந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் என்றும் சிறிய அளவிலான பிரச்னைகள் இருந்தால் கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.