சென்னை:

ர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த  பாடி பில்டர் பாஸ்கரனுக்கு தமிழக அரசு சார்பில்  ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் பாடி பில்டர்  பாஸ்கரன். இவர்,  கடந்த 2018ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாடிபில்டிங் போட்டி மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியா வுக்கும் பெருமை சேர்த்தார். அவருக்கு இந்த ஆண்டு மத்தியஅரசு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், தமிழகஅரசு பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ. 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை சிறப்பினமாக வழங்கப்படுவதாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த ஊக்கத் தொகையில்  15 சதவீத தொகையான 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அவரது பயிற்றுனரான அரசு என்பவருக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.